அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் இருந்த விலங்குகள் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு வெளியேறுகின்றன." என்பது பைபிள் கூறும் கதையாகும். பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிய ஒவ்வொரு ஜோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபாமாக உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட ஜோடி விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.
இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
நோவாவின் பேழைக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு விவரித்துக் கூறும், நோவாவின் பேழை பணியாளர்கள் உள்ளனர். ஆங்கிலம் மற்றும் காண்டனீஸ் மொழிகளில் விவரிப்பாளர்கள் உள்ளனர்.