1982 புதிய உலக குழுமம் அன்ற நிறுவனம் சிம் சா சுயி கிழக்கில் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அவென்யூ ஆப் ஸ்டார் என்ற இடத்தில் உள்ள சாலையை உருவாக்கியது. இரவு நேரங்களில் மின்சார கதிர்விச்சின் விளக்கொளிகளின் அலங்கார வடிவமைப்புக்களையும் ரசித்துகொண்டே நடக்கலாம். இங்கு சில குறிப்பிட்ட முக்கியமான நாட்களில் வண்ண வான வெடி காட்சியும், மக்கள் வண்ண கதிர்வீச்சின் காட்சியையும் இந்த அவென்யூ ஆப் ஸ்டாரின் சாலையில் இருந்து ரசிப்பார்கள் அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏராளமான் வெளிநாட்டினர் இதன் பார்த்து ரசித்த வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சியை காண முடிகிறது.
இந்த சாலையில் புகைபிடிக்க கூடாது, செல்ல பிராணிகளை அழைத்து செல்ல முடியாது, சைக்கிள், வண்டி எதுவும் இங்கு ஓட்டிச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால அபராத தொகை அதிக அளவில் இருக்கும். இந்த சாலையில் ப்ரூஸ்லியின் வெங்கல உருவ சிலையையும், இந்த சாலையின் நிலப்பரப்பில் ஜாக்கி சான், ஜெட்லி, போன்ற நட்சத்திரங்களின் கைதடங்களும், அவர்களின் பெயர்களுடன் கூடிய கையொப்பமும் பதித்துள்ளனர்.
இந்த வீதியில் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை, மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், காணப்படுகின்றன ஒரு திறந்தவெளி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹாங்காங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடும்.