பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் என்ற புத்த விகாரம் ஹாங்காங் சா டின் என்ற இடத்தில் இருக்கிறது. இந்த விகாரத்திற்கு செல்லும் இருபாதைகளிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெளத்த பிக்குகளின் சிலைகள் இருக்கிறது. 1933 ஆம் ஆண்டில் சீன புத்த பிக்கு இங்கு வந்து இந்த மடாலயத்தை கட்டினார். புத்தரின் போதனைகளையும் மக்களுக்கு போதித்தார்.
புத்த பிக்குகள் இங்கே காவி உடைக்கு பதிலாக கருப்பு உடை அணிந்துள்ளனர். பிரதான பிக்கு மட்டுமே மஞ்சள் உடையும் அதற்கு மேல் சிகப்பு மேலாடை ஒன்றும் அணிந்துள்ளார். செருப்பு அணிவதற்கும் இங்கு தடைகள் இல்லை. புத்த விகாரையின் உள்ளே சுவர்களில் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான சிறிய பெட்டிகள், புத்தர் சிலை ஆயிரக் கணக்கில் உள்ளன. அந்த பெட்டிகளுக்கு குறி இடப்பட்டிருக்கிறது. அந்த பெட்டிக்கு சொந்தக்காரர் அந்த பெட்டியின் உள்ளே தனது இறந்த உறவினர்களின் படங்களை வைத்து சாம்பலையும் பேணி வைக்கின்றனர். புத்தர் அவர்களுக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த சாம்பலுக்கு பூசைகள் செய்கின்றனர் இறந்தவர்களின் சாம்பலை எடுத்து பூசை செய்து, படையல் இடுவதும் போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை இந்த விகாரத்தில் செய்கின்றனர். சிங்மிங் .திருவிழாவின் போது இறந்தவர்களுக்கான வழிபாட்டு முறைகள் செய்து பழம், அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படையலிட்டு வணங்குகிறார்கள். அப்படி செய்தால் இறந்தவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு.