82 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், 26 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 500 பண்பாட்டுத் துறை பிரதிநிதிகள் இக்கூட்டத்தில், பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். யூனேஸ்கோவின் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ சர்வதேச பயிற்சி மையத்தின் தலைவர் யாங் ச்சி சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
"நவீனமயமாக்கம், சமூக அடிப்படை கட்டுமான வசதிகளில் முன்னேற்றம், உயர் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன. அவை பொதுவாக பண்பாடு அளிக்கும் பங்களிப்பை அலட்சியம் செய்கின்றன. ஒரு நாடு பண்பாடு மீது கவனம் செலுத்தாமல் இருந்தால், அந்நாடு தொடரவல்ல வளர்ச்சியடைய முடியாது" என்றார் அவர்.