உலக புகழ்பெற்ற அறிஞரும், அரும்பொருள் சேகரிப்பவரும், அறநிலைதுறையினருமான Nasser David Khalili சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். சீனா 130 கோடி மக்களை கொண்டுள்ளது. ஆனால் சீனாவில் சுமார் 3000 அருங்காட்சியங்கள் மட்டுமே இருக்கின்றன. ஐரோப்பாவில் 19 ஆயிரம் அருங்காட்சியகங்களும், அமெரிக்காவில் 17 ஆயிரம் அருங்காட்சியகங்களும் உள்ளன என்று அவர் தெரிவித்தார். பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புத் துறையில் சீனாவுக்கு அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் சீனா பெரும் முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் பண்பாட்டுத் தனிச்சிறப்புகள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போதைய பாதுகாப்புப் பணியை நிலைநிறுத்தினால், எடுத்துக்காட்டாக அருங்காட்சியகங்களை நிறுவுதல், பண்பாட்டுக் கண்காட்சிகளை நடத்துதல் ஆகியவற்றால், உலகப் பண்பாட்டின் முதன்மை வழிகாட்டியான சீனாவின் தகுநிலை மேலும் வலுப்படுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்றார் அவர்.
நேயர்களே, "சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு பணி"பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.