இருந்த போதிலும், சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு இன்னமும் துவக்க கட்டத்தில் தான் இருக்கின்றது. சில பிரதேசங்களில், குறிப்பாக வளர்ச்சி குன்றிய பிரதேசங்களில், பண்பாடு, சுற்றுலா பெயர் அடையாளமாக மட்டுமே கருதப்படுகிறது. பண்பாட்டினால் ஏற்படும் பொருளாதார மதிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பண்பாட்டு மரபுச் செல்வங்களை பாதுகாக்கும் போக்கில் சீனா பெற்றுள்ள அனுபவங்களையும், படிப்பினைகளையும் தொகுத்து, பண்பாட்டு நிலையை உயர்த்த வேண்டும் என்று சீனாவின் சுன் யாட்சன் பல்கலைக்கழகத்தின் சீன பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ ஆய்வு மையத்தின் பேராசிரியர் வாங் சியாவ் பிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நடைமுறைகளை செயல்படுத்தும் போக்கில், மக்கள் படிப்பினைகளைத் தொகுத்த பின், படிப்படியாக பணிகளை மேலும் சீராக மேற்கொள்கின்றனர். இது சமூகத்தின் முன்னேற்றமாகவும், ஜனநாயகத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. கன்பிஃசியஸ் அவர்கள் இயற்றிய தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபடுகிறேன். 1980ஆம் ஆண்டுகளின் இடைக்காலத்தில், ஷான் துங் மாநிலத்தின் ச்சு ஃபி நகரின் சுற்றுலாத் துறையை வளர்த்து, இந்நகரின் பொருளாதார பயனையும் புகழையும் உயர்த்தும் பொருட்டு, இந்நகரிலுள்ள தொடர்புடைய வாரியங்கள் பயனோக்கத்துடன் செயல்பட்டன. அதற்கு பிந்தைய ஒவ்வோர் ஆண்டும் மாற்றங்கள் உருவாகி வருகிறது. 1990ஆம் ஆண்டுகளில் இவ்வாரியத்தின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டன. முன்னதாக கன்பிஃசியஸ் மற்றும் கன்பிஃசியசின் தத்துவம் பற்றி அவர்கள் அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் படிப்படியாக கற்றுக்கொண்டு, அறிவை அதிகரித்து, பண்பான நடத்தை பண்பாடு, கன்பிஃசியசின் தத்துவம் ஆகியவை பற்றி மேலதிகமாக அறிந்து கொண்டுள்ளனர். பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நடைமுறையிலிருந்து கற்றுக்கொள்ளும் போக்காகும். இப்போக்கில் ஒவ்வொருவரும் அவரவர் உடல் மற்றும் மன நிலைகளை உயர்த்தி, அறிவை அதிகரித்துள்ளனர்" என்றார் அவர்.