கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் சீனா அதிகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. "தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம்", "பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வச் சட்டம்" ஆகியவற்றை மையமாக கொண்ட பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் சட்டவிதிகள் முறைமை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபுச் செல்வ நாள் நிறுவப்பட்டு, பண்பாட்டு மரபுச் செல்வக் கணக்கெடுப்புப் பணி வலுப்படுத்தப்பட்டுள்ளது. மரபுச் செல்வ பாதுகாப்பு பட்டியல் அமைப்பு முறை உருவாக்கப்பட்டு, பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வகைகளின் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்கிறது. யூனேஸ்கோவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ நடவடிக்கைகளில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, தொடர்புடைய விதிகளையும், வரையறைகளையும் வகுப்பதில் சிறப்பாக பங்கெடுத்துள்ளது. அவ்வாறு மேற்கொள்ள பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பில் அதிக பயன்கள் பெறப்பட்டுள்ளன.