Friday    Apr 11th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்
  2013-07-31 08:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சின்ச்சியாங்கின் Que Le Ta Ge மலையின் தெற்கே அடிப்பகுதியிலும், தாக்லாமாகன் பாலைவனத்தின் வட பகுதியிலும், வெய்கன் ஆற்றின் மேற்கு கரையிலும் அமைந்துள்ள சின் ஹெ மாவட்டம், பழமை வாய்ந்த ச்சியு ச்சி நாகரீகத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாகும். இது பண்டைய பட்டுப்பாதையிலுள்ள ஓர் இடமாகும். சின் ஹெ மாவட்டத்தின் மக்கள் தொகை, ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகும். இது, உய்கூர் இனத்தை முக்கியமாக கொண்ட பல சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் இடமாகும். இம்மாவட்டத்தில் உய்கூர் இன மக்களின் எண்ணிக்கை சுமார் 95 விழுக்காடாகும். காயி கிராமம், சின் ஹெ மாவட்டத்தில் இருக்கிறது. காயி கிராமத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை இசை கருவி வகைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வாழும் மக்களின் விவேகத்தை வெளிகாட்டுபவையாக இருக்கின்றன.

இக்கிராம மக்கள், இசையை கேட்டதும், உடனடியாக நடனம் ஆட தொடங்கிவிடுகின்றனர். அவர்கள் இசை மீது கொண்டுள்ள ஆழமான பற்றை அவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்.

<< 1 2 3 4 5 6 >>
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040