• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்
  2013-07-31 08:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

காயி கிராமத்தில் தயாரிக்கப்படும் இசைக் கருவிகளின் வகைகள் அதிகம். இந்த அழகான இசை கருவிகளை இசைக்கும்போது, இனிமையான ஒலி எழுகிறது. இசைக் கருவிகள், தன்பர், துதர், Rewapu, சதர், தபு, நக்டா உள்ளிட்ட பத்துக்கு அதிகமான வகைகளைச் சேர்ந்தவையாகும்.

காயி கிராமவாசிகள், இசைக் கருவிகளைத் தயாரிப்பதில் நீண்டக்கால வரலாறு கொண்டுள்ளனர். 300 ஆண்டுகளுக்கு முன், இக்கிராமவாசிகள், விவசாயத்தில் ஈடுபட்ட அதேவேளையில், இசைக் கருவிகளையும் தயாரித்து வந்தனர். தற்போது, இக்கிராமத்திலுள்ள 215 குடும்பங்களில், 105 குடும்பங்கள், இசைக் கருவி தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இக்கிராமத்தின் நாட்டுப்புற கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் இசைக் கருவிகள் இனிமையான ஒலியை எழுப்புகின்றன. அது மட்டுமல்ல, இந்த இசை கருவிகள் செய்யப்படும் அலங்கார உருவ வடிவங்களும் மிகவும் அழகானவை, சிக்கலானவை. இந்த இசைக் கருவிகள், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி்ப் பிரதேசம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு இடங்களில் அதிகமாக விற்கப்படுகின்றன. இசைக் கருவிகள், இக்கிராமத்தின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, செல்வமடைவதற்கான முக்கிய வழிமுறையாகவும், சின் ஹெ மாவட்டத்தின் நாட்டுப்புறக் கலையின் ஒரு தனிச்சிறப்பாகவும் இருக்கின்றன. 2006ஆம் ஆண்டு மார்ச் திங்கள், சின் ஹெ மாவட்டத்தின் சிறுபான்மை தேசிய இன இசைக் கருவிகளின் தயாரிப்பு, சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மூன்றாவது தொகுதி பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜூன் திங்கள் காயி கிராமம், சீனாவின் இரண்டாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040