• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்
  2013-07-31 08:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

காயி கிராமத்தில், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசு அய்யிதி யிமிங் வாழ்கின்றார். அவருக்கு வயது 56. கடந்த 200க்கு அதிகமான ஆண்டுகளில் அய்யிதி யிமிங்கின் குடும்பம் இசைக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அய்யிதி யிமிங் 15 வயது முதல், பல்வகை இசைக் கருவிகளைத் தயாரிக்கும் நுட்பத்தை கற்றுக்கொள்ள தொடங்கினார். கடந்த 41 ஆண்டுகளில், அவர் துதர், கை முரசு, தன்பர், ஷதர், Rewapu உள்ளிட்ட இசைக் கருவி வகைகளைத் தயாரி்த்துள்ளார். அந்த இசைக் கருவிகளில், வளைவான நாணுடைய இசைக் கருவிகளைத் தயாரித்து இசைக்க அவர் மிகவும் விரும்புகின்றார். இந்த இசைக் கருவிகளை இசைப்பதே சற்று கடினமானது. எனவே அவற்றை தயாரிப்பதில் மேலும் அதிகமான இன்னல்கள் உள்ளன.

அய்யிதி யிமிங்கின் வீட்டின் தோட்டத்தில் உள்ள திராட்சைப் பின்னல் தட்டியின் கீழ்ப்பகுதி, அவர் இசைக் கருவிகளைத் தயாரிக்கும் இடமாகும். அவரது வீட்டின் அறையில், சில பத்து இசைக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040