• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்
  2013-07-31 08:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீகின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச குழு, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீகின் சின் ஹெ மாவட்டத்தின் குழு ஆகியவற்றின் ஆதரவுடன், காயி கிராமத்தில் உள்ள யிச்சிஅய்ரிக் வட்டத்தின் இடை நிலைப்பள்ளியில் சிறுபான்மை தேசிய இன இசைக் கருவிகள் தயாரிப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது இப்பயிற்சி வகுப்பில் 20 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு அரை நாள் பாடங்களும் அரை நாள் சிறுபான்மை தேசிய இன இசைக் கருவி தயாரிப்பும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவ்வகுப்பை இரண்டு ஆசிரியர்கள் நடத்துகின்றனர். திங்கள்தோறும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் 700 யுவான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அய்யிதி யிமிங், 40க்கு அதிகமான மாணவர்களுக்கு இசைக் கருவித் தயாரிப்பு நுட்பத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார். அய்யிதி யிமிங்கின் மகன், இசைக் கருவித் தயாரிப்பு நுட்பத்தின் வாரிசாக, மாவட்டத் தலைநகரில் இசைக் கருவி கடை ஒன்றை நடத்துகின்றார். எதிர்காலத்தில் பெய்சிங்கிற்கு வந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர் அய்யிதி யிமிங் ஆசைப்படுகின்றார்.

நேயர்களே, "சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040