• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கிலுள்ள இசைக் கருவி தயாரிப்பு கிராமம்
  2013-07-31 08:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, காயி கிராமத்தில் இசை கருவிகளைத் தயாரிக்கும் 105 குடும்பங்கள், ஆண்டுக்கு தயாரித்து, விற்பனை செய்யும் இசைக் கருவிகளின் மொத்த எண்ணிக்கை, 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் சுமார் 8 ஆயிரம் யுவானாகும். சில குடும்பங்கள் மிக அதிகமாக 30 ஆயிரம் யுவான் வரை சம்பாதிக்க முடியும். இசைக் கருவித் தயாரிப்பில் இக்கிராமத்தின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, 15 லட்சம் யுவானாகும். சின்ச்சியாங்கின் ஹாமி மற்றும் துருபன், ஹெனான் மாநிலம், பெய்சிங் மாநகர், ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் இக்கிராமத்தில் தயாரிக்கப்பட்ட இசைக் கருவிகள் விற்கப்படுகின்றன.

காயி கிராம விவசாயிகள், சாதாரண நாட்களில் விவசாயம் செய்கின்றனர். ஓய்வாக இருக்கும்போது மட்டுமே இசைக் கருவிகளைத் தயாரிப்பதில் ஈடுபடுகின்றனர். பொதுவாக கூறின், ஒரு தலைசிறந்த இசைக் கருவியைத் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் வரையும், ஓர் எளிய இசைக் கருவியைத் தயாரிக்க 7 முதல் 8 நாட்கள் வரையும் தேவைப்படுகிறது .

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040