வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களை வெளிகொணரும் வழிக்காட்டி...சீன வானொலி தமிழ்ப் பிரிவு
வெளிநாடுகளிலுள்ள செய்தி ஊடகங்கள் மற்றும் மக்கள் சீனாவை பற்றி அறிந்துகொள்ள உதவும் தமிழ்ச் செய்தி ஊடகமாக சீன வானொலி தமிழ்ப் பிரிவை கருதுகின்றனர். சீனாவை பற்றி பக்கசார்பற்ற முறையில் அரசின் கருத்துகளை அறிய சீன வானொலி தமிழ் ஒலிபரப்பையே கேட்கின்றனர்.
எடுத்துக்காட்டாக 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பிபிசி வானொலி தமிழ்ப் பிரிவோடு தொடர்பு கொண்டு ஒலிம்பிக் போட்டியின் செல்வாக்கு, முக்கியத்துவம், ஆயத்தப் பணிகள் ஆகியவை பற்றி பேட்டி கண்டு நிகழ்ச்சியாக தயாரித்து ஒலிபரப்பியது.
2008 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் சீனாவின் சிக்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் போது பிபிசி தமிழ்ச் சேவை தமிழ்ப் பிரிவிடமிருந்து செய்திகளை பெற்றதோடு, ஆறுதலும் தெரிவித்தது. நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணிகள் பற்றியும், சீன அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் பேட்டி கண்டது.
அதேவேளை தமிழகத்தில் புகழ் பெற்ற சன் தொலைகாட்சி தமிழ்ப் பிரிவிடமிருந்து நாள்தோறும் செய்திகளை வாங்கி அதன் ஒளிப்பரப்பில் அறிவித்தது. அத்தோடு வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடனும் தமிழ்ப் பிரிவுடன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு சீன அரசு மேற்கொண்ட பேரிடர் நீக்க முயற்சிகளை ஒளிபரப்பியது.
2008ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தீபதொடரோட்டம் நடைபெற்றபோதும் தமிழ்ப் பிரிவை பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
சிங்கப்பூர் வானொலி தமிழ்ப்பிரிவும் சீனத் தமிழ்ப் பிரிவோடு தொடர்புக் கொண்டு முக்கிய செய்திகளை பெற்று ஒலிபரப்பி வருகிறது