இவ்வாறு பன்னாட்டுச் செய்தி ஊடகங்களுடன் ஒத்துழைத்து தமிழ்ப் பிரிவு உலக வாழ் தமிழ் மக்களுக்கு செய்திச்சேவை புரிந்து வருகின்றது. அதேவேளை தமிழ் ஒலிபரப்பு தமிழர்களிடையிலும் புகழ் பெற்றுள்ளது. 90ம் ஆண்டுகளிலும் 2010ம் ஆண்டிலும் உலகளவில் செல்வாக்கு வாய்ந்த செந்தமிழ் மாநாடு நடைபெற்றது. முன்னாள் தமிழ்த் துறை தலைவரான பேராசிரியர் எஸ் சுந்தரன், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும் முதன்மை அறிவிப்பாளருமான பேராசிரியர் தி. கலையரசி ஆகியோர் தமிழக அரசு விடுத்த அழைப்பை ஏற்று இம்மாநாடுகளில் கலந்து ஆய்வுரை நிகழ்த்தினர். மாநாட்டில் கலந்து கொண்ட போது பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் செய்தி அறிவிப்பாளர்களுடன் பழகி, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை அறிமுகப்படுத்தினர். தமிழ்ப் பிரிவின் பணியாளர்களின் முயற்சிகளின் மூலம் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு உலகில் மென்மேலும் அதிகமானோரால் பாராட்டப்பட்டு வருகின்றது.
உலகில் தமிழ் பேசுவோர் அனைவரும் இன்பமாக வாழ்க என்று ஆழ் மனத்திலிருந்து வாழ்த்துகின்றேன்.