
இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது,
'எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதேவேளையில், பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொள்வது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இதனை பாராட்டி வரவேற்கிறேன் ' என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் அரசியல்ரீதியாக தலையிடப் போவதில்லை. இரு நாட்டு அரசுகளின் கையில் தான் தீர்வு உள்ளது என்றும் பான் கி மூன் தெரிவித்தார்.




அனுப்புதல்