லீ கெச்சியாங்: பொது மக்களுக்கு நன்மை வழங்க வேண்டும்
2013-08-20 16:59:00 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், ஆகஸ்ட் 17 முதல் 19ஆம் நாள் வரை, கான்சூ மாநிலத்தின் திங்சி மற்றும் லான்சோ நகரில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். சீனாவின் மேற்குபகுதி குறிப்பாக வறுமையான பகுதியின் இருப்புப் பாதை கட்டுமானத்திற்கு முந்துரிமை அளிக்க வேண்டும். சிறிய தொழில் நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய ஆற்றலாகும். பல்வேறு நிலை அரசுகள் இந்நிறுவனங்களுக்கு நல்ல வளர்ச்சிச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மேலும், பல்வேறு நிலை அரசுகள் மற்றும் தொடர்புடைய துறைகள் கொள்கைகளை நன்றாகச் செயல்படுத்தி, பொது மக்களுக்கு நன்மை பெற உதவி செய்ய வேண்டும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய