• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்துக்கு பெரும் பங்காற்றி வரும் சீனப் பொருளாதார வளர்ச்சி
  2013-09-04 18:18:31  cri எழுத்தின் அளவு:  A A A   
செப்டெம்பர் 3ஆம் நாள், ஜி-20 அமைப்பின் உச்சிமாநாடு துவங்கும் முன், உலக வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் பாஸ்கல் லாமி சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்து, பொருளாதாரம், சர்வதேச வணிகம் ஆகியவை தொடர்பான பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் சீனப் பொருளாதாரத்தின் சாதனை குறித்து லாமி பேசுகையில், சீனப் பொருளாதார வளர்ச்சி, சீனாவின் செழுமை மற்றும் நாட்டின் ஆற்றல் வெளிக்கொண்டு வந்த பயன்களை உலக நாடுகளும் அனுபவித்து வருகின்றன. தற்போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 10 விழுக்காடு வகிக்கிறது. சீனாவின் பொருளாதார அதிகரிப்பு, உலகப் பொருளாதாரத்துக்கு மாபெரும் பங்காற்றி மதிப்பை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பில் 8 ஆண்டுகளாக தலைமை இயக்குநராக பணிபுரிந்து வந்த பாஸ்கல் லாமி அண்மையில் பதவியிலிருந்து விலகினார். அவரது கண்ணோட்டத்தில், வலிமைமிக்க சீரான சீனப் பொருளாதாரம் மேலும் பரந்தளவில் உலகிற்கு நன்மை பயக்கும். இன்றைய சீனா, முக்கிய ஏற்றுமதி செய்யும் நாடு மட்டுமல்லாமல், பல துறைகளில் பல்வேறு நாடுகளுக்கான மாபெரும் சந்தையும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில திங்களில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தகச் சர்ச்சை பற்றிக் குறிப்பிடுகையில், வர்த்தகம் செயல்படும் எந்த இடத்திலும் சர்ச்சை இருக்கும் என்று லாமி கருத்து தெரிவித்தார். சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தற்போதுள்ள உலகில் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். அவற்றுக்கிடை சர்ச்சைக்குரிய வர்த்தகம், இருதரப்பு வர்த்தகத்தில் சிறு பகுதி மட்டுமே வகிக்கிறது. அவற்றைத் தீர்ப்பதற்கு உலக வர்த்தக அமைப்பு இணக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே இந்த வர்த்தகச் சர்ச்சை அரசியல் மோதலாக மாற போவதில்லை. திறந்த வர்த்தகம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் தலைசிறந்த வழிமுறை. வர்த்தகப் பாதுகாப்பு வாதம் பொருளாதார மீட்சிக்கு தடையாக அமையும் என்று லாமி தெரிவித்தார்.

தற்போதைய உலக வர்த்தகத்தில், பயனுள்ள பொது வரையறை மற்றும் விதிமுறையை உலகளவில் உருவாக்குவது என்பது மிக முக்கிய பிரச்சினையாகும். தொடர்புடைய பிரச்சினைகள், உலக வர்த்தகத்தில் பங்கெடுக்கும் அனைத்து நாடுகளாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். மதிப்பு தொடர்புகள் பின்னப்படும் காலத்தில், உற்பத்தி மற்றும் சேவை எல்லையைத் தாண்டியுள்ளன. வேறுபட்ட வர்த்தக விதிமுறை செயல்பட முடியாது. எனவே, பல தரப்பு வர்த்தக அமைப்பு, வர்த்தகத் திறப்பை முறைப்படுத்தி சர்வதேச சந்தை ஒழுங்கை நிலைநிறுத்தும் பயனுள்ள வழிமுறையாகும். பல தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் கருத்து வெளிப்பாட்டுரிமை குறைவாக உள்ள சிறு நாடுகளுக்கு, பல தரப்பு வர்த்தக அமைப்பு மிகவும் நியாயமாக செயல்படும் என்று லாமி கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040