• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:து ஜியா இனத்தின் டிஸ்கோ நடனம்
  2013-09-05 10:07:36  cri எழுத்தின் அளவு:  A A A   
கை அசைவுகள் கொண்ட நடனம், சீனாவின் து ஜியா இனத்தின் பழமை வாய்ந்த நடனமாகும். இந்நடனத்தில், நடனக் கலையும், விளையாட்டுச் செயல்திறனும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. கை அசைவுகள் கொண்ட இந்த நடனம் "கீழை நாட்டின் டிஸ்கோ " என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் ஹூபெய் மாநிலம், ஹூனான் மாநிலம், சொங் சிங் மாநகர் ஆகியவற்றை ஒட்டியமைந்திருக்கும் யூ சுவெய் ஆற்றுப்பள்ளத்தாக்கில் இந்நடனம் முக்கியமாக பரவியுள்ளது. ஹூபெய் மாநிலத்தின் ஏன் ச்சு தன்னாட்சி சோவின் லெய் ஃபிங் மாவட்டமும், ஹூனான் மாநிலத்தின் சியாங் சி தன்னாட்சி சோவின் லுன் ஷான் மற்றும் யூங் சுன் மாவட்டங்களும், இந்நடனம் பரவியுள்ள முக்கிய இடங்களாகும். இந்த டிஸ்கோ நடன அரங்கேற்றம், து ஜியா இனத்தின் மத்தியில் மிக பெரிய நாட்டுப்புறப் பண்பாட்டு நடவடிக்கையாகவும், அவ்வினத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டு மாதிரிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கை அசைவுகளை கொண்ட இந்த நடனம், குறிப்பிடும் படியான து ஜியா இனத்தின் வரலாற்றின் சிற்றிருவ மாதிரி என கூறலாம். இந்நடனம், து ஜியா இன மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. இந்நடனத்தின் அரங்கேற்ற அம்சங்களும் வடிவங்களும், து ஜியா இனத்தின் சமூகம், வரலாறு, நாட்டுப்புறப் பழக்க வழக்கம், அவ்வினத்தின் தனிச்சிறப்பு, பண்பாடு மற்றும் கலையின் வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றை மக்கள் புரிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன், து ஜியா இன மக்கள் மரத்தைச் சுற்றி, கை அசைத்து ஆடும் காட்சி, புத்தகம் ஒன்றில் பதிவுச் செய்யப்பட்டது. ஹூபெய் மாநிலத்தின் ஏன் ச்சு தன்னாட்சி சோவின் லெய் ஃபங் மாவட்டத்தின் இவ்வகை டிஸ்கோ நடனத்தின் மிக முற்கால பதிவு இதுவாகும்.
1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040