• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:து ஜியா இனத்தின் டிஸ்கோ நடனம்
  2013-09-05 10:07:36  cri எழுத்தின் அளவு:  A A A   

கை அசைவுகளின் டிஸ்கோ நடன வகைகளில், கைகளை விரிவாக அசைக்கும் நடன வகை, கைகளை மிதமாக விரித்து ஆடும் நடன வகை ஆகிய இரு நடன வகைகள் இடம்பெறுகின்றன. தற்போது, முதல் வகையை காண முடியவில்லை. இரண்டாவது வகை, லெய் ஃபெங் மாவட்டத்தின் ஷெமி ஏரி பிரதேசத்தில் பரவி வருகிறது. சீனச் சந்திர நாட்காட்டியின்படி, மார்ச் 3 முதல் 15ஆம் நாள் வரை இந்நடன அரங்கேற்றம் பொதுவாக நடைபெறுகிறது.

ஷெமி ஏரி பிரதேசத்தின் கை அசைவுகள் கொண்ட நடனத்தின் அபிநயங்களில், ஒரு கை அசைவுகள், இரட்டை கை அசைவுகள், கை சுழற்றும் அசைவுகள் ஆகிய வகைகள் இருக்கின்றன. இந்த நடனம், து ஜியா இன மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அதிக கை அசைவுகள் கொண்ட நடனத்தில் உள்ள வேட்டையாடுதல் நடனத்தில், வேட்டையாடி, காட்டு மிருகங்களை போல பாவனை செய்யும் அபிநயங்கள் பல இருக்கின்றன. விவசாய நடனம், து ஜியா இன மக்கள் வேளாண் உழைப்பில் ஈடுபடும் காட்சிகளை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை நடனத்தில், துப்புரவு செய்தல், கொசு அடித்தல் உள்ளிட்ட பத்துக்கு அதிகமான அபிநயங்கள் இடம்பெறுகின்றன. கடந்த காலத்தில், ராணுவ நடனமும், விருந்து நடனமும் இருந்தன. ஆனால் தற்போது இவ்விரு நடன வகைகளின் அபிநயங்கள் மறைந்து விட்டன.

லெய் ஃபெங் மாவட்டத்தின் கை அசைவுகள் கொண்ட நடனம், பொழுதுப்போக்கு, பலியிடுதல், தகவல் தொடர்பு, கல்வி ஆகிய செயல்திறன்களைக் கொண்டுள்ளது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040