• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:து ஜியா இனத்தின் டிஸ்கோ நடனம்
  2013-09-05 10:07:36  cri எழுத்தின் அளவு:  A A A   

கை அசைவுகள் கொண்ட இந்த நடனம், ஆடலும் பாடலும் ஒருங்கிணைந்த கலை வடிவமாகும். முற்காலத்தில், மக்கள் இந்நடனத்தை ஆடும் போது, கை அசைவுகளோடு பாடலையும் பாடி ஆடினர். தற்போது லெய் ஃபெங் மாவட்டத்தின் து ஜியா இன மக்கள் கை அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடும் போது பொதுவாக பாடல் பாடுவதில்லை. இருந்த போதிலும், இரண்டு கை அசைவுகளின் நடனப் பாடல்கள் மிகவும் பரவி விட்டன. ஒன்று,"உணவு சாப்பிட, மண்ணைத் தோண்ட வேண்டும்" என்ற பாடலாகும். இரண்டு, "போரில் ஈடுபட ஆண்களை ஆணையிடு" என்ற பாடலாகும். இப்பாடல்களின் வரிகள் எளிதாக இருந்தாலும், வாழ்க்கை பற்றிய மக்களின் தத்துவத்தையும், மாவீரர்கள் மீதான அவர்களின் மதிப்பையும் வெளிப்படுத்துகின்றன. து ஜியா இன மக்களின் அயரா, துணிவு மிகுந்த பண்புகள், இக்கலை வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறன.

கை அசைவுகள் கொண்ட நடனம், கண்டிப்பான பாடம் சொல்லிக் கொடுத்து கற்பிக்கும் முறையால் அன்றி, குடும்பம் என்ற முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கையேற்றப்பட்டு வருகிறது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040