பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகையில், சீனாவும் அமெரிக்காவும் ஜி-20 குழுவுக்குள் உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தி, உலக பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப் பொது நலன்களைத் தெளிவாகக் காட்டுகிற பிரதேசமாக அமைந்துள்ளது. அதேவேளை, இப்பிரதேசத்தில் வளர்ச்சி வாய்ப்பும் சர்ச்சையும் நிலவுகின்றன. எனவே, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி, நிலைப்புத்தன்மை, செழுமை ஆகிய குறிக்கோள்களுக்காக தொடர்புடைய நாடுகள் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா நேர்மையான வழிமுறையில் முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
இது குறித்து பராக் ஒபாமா கூறுகையில், ஆசிய-பசிபிக் விவாகரங்களில் இரு நாடுகளும் பன்முக கூட்டாளியுறவை அமைத்து, பிரதேச ஒத்துழைப்பை தூண்ட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புதவாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சிரியா பிரச்சினை தொடர்பாக சீனாவின் கருத்து நிலைபாட்டை ஷிச்சின்பிங் விளக்கி கூறினார். அரசியல் தீர்வு, இப்பிரச்சினைக்கு ஒரேயொரு உரிய வழிமுறை. ராணுவ நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினையை அடிப்படையில் தீர்க்க முடியாது. சிரியா பிரச்சினைச் சர்வதேச கூட்டம் வெகுவிரைவில் நடத்துவதற்காக உலக நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.