• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் உரை
  2013-09-07 18:18:34  cri எழுத்தின் அளவு:  A A A   

7ம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், கஸாகஸ்டான் தலைநகர் ஆஸ்டானாவில், முக்கிய உரை நிகழ்த்தினார். மத்திய ஆசிய நாடுகளுடன் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை இடைவிடாமல் அதிகரித்து, நட்புறவை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை முன்னேற்ற சீனா விரும்புகிறது. இருத்தரப்பும் புத்தாக்க ஒத்துழைப்பு மாதிரி மூலம், பட்டு பாதை பொருளாதார பிரதேசத்தை கட்டியமைக்க வேண்டும் என்று ஷீ ச்சின் பிங் தம் உரையில் தெரிவித்தார்.

7ம் நாள் காலை, கஸாகஸ்டனின் மிக உயர் நிலையமான நசார்பயெவ் பல்கலைக்கழகத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் சென்றந்தார். கஸாகஸ்டன் அரசுத் தலைவர் நசார்பயெவ் பல்கலைக்கழக வளாகத்தில் ஷீ ச்சின் பிங்கை வரவேற்றார். அவர், மாணவர்களுடன் இணைந்து, ஷீ ச்சின் பிங்கின் சொற்பொழிவை கேட்டறிந்தார்.

உரையின் துவக்கத்தில், 2000 ஆண்டு வரலாற்றுடைய ஐரோப்பாவையும் ஆசியாவையும் ஒன்றிணைந்த பட்டு பாதையை உணர்வுடன் ஷீ ச்சின் பிங் மீளாய்வு செய்தார். இந்த பழைய பாதையில், பல்வேறு நாடுகளின் மக்கள், நீண்டகாலமான நட்புறவை உருவாக்கினர். ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை வழங்கியமை, சமநிலையில் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்தமை, ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஊன்றி நின்றால், வேறுப்பட்ட தேசிய இனங்களும், வேறுப்பட்ட நம்பிக்கை மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடைய நாடுகளும், கூட்டாக வளரலாம் என்று 2000 ஆண்டுகால வரலாறு நிரூபித்துள்ளதாக அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் தெரிவித்துள்ளார்.

தற்போது சீனா-மத்திய ஆசிய நாடுகளின் உறவு வளர்ச்சியில் அரிய வாய்ப்பு உள்ளது என்று ஷீ ச்சின் பிங் கூறினார்.

பல்வேறு ஐரோப்பிய-ஆசிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, வளர்ச்சி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், புத்தாக்க ஒத்துழைப்பு மாதிரியின் மூலம், பட்டுப் பாதை பொருளாதார பிரதேசத்தை உருவாக்கலாம். பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நலன் தரும் திட்டப்பணி, இதுவாகும் என்றார் அவர்.

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்பில் இளைஞர்களிடை பரிமாற்றத்தை முன்னேற்றும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில், சீனா, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகளுக்கு 30 ஆயிரம் அரசு நிதியுதவி தகுநிலைகளை வினியோகிக்கும். சீனாவில் மேற்படிப்புக்காக கம்ஃபூசியஸ் கழகத்தில் பணி புரியும் 10 ஆயிரம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் அழைக்கும் என்று ஷீ ச்சின் பிங் தெரிவித்தார்.

ஷீ ச்சின் பிங்கின் ஆலோசனைக்கு நசார்பயெவ் ஆக்கபூர்வமாக பதிலளித்தார். கஸாகஸ்டனின் நட்புறவுடைய அண்டை நாடு சீனாவாகும். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக தொகை 2600 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அடுத்த சில ஆண்டுகளில் 4000 கோடி அமெரிக்க டாலரை எட்டும். சீனாவுடனான நீண்டகாலமான உறவை கஸாகஸ்டான் வளர்க்கும் என்று அவர் கூறினார்.

நீங்கள் ஆலோசித்த பட்டுப் பாதை பொருளாதார பிரதேச திட்டப்பணி முன்னேறி வருகிறது. பொருளாதார துறையைத் தவிர, பண்பாட்டு மற்றும் இளைஞர் பரிமாற்றம் இன்னும் முக்கியமானது. சீனாவுடனான நீண்டகால உறவை வளர்க்க கஸாகஸ்டான் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040