• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, கஸாகஸ்டான் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2013-09-08 16:44:28  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 7ஆம் நாள் ஆஸ்டானாவில் கஸாகஸ்டான் அரசுத் தலைவர் நசார்பயெவ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-கஸாகஸ்டான் உறவின் வளர்ச்சியை இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தொகுத்ததோடு, எதிர்காலத்தில் இரு நாட்டு ஒத்துழைப்பை பன்முகங்களிலும் திட்டமிட்டு, சீன-கஸாகஸ்டான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை ஆழமாக்குவது பற்றியும் பரந்துபட்ட முக்கிய பொது கருத்துகளுக்கு வந்தனர்.

சீன-கஸாகஸ்டான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு, சுமுகமான அண்டை நட்புறவு, ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முன்மாதிரியாகும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.

கஸாகஸ்டானும் சீனாவும் ஒன்றுக்கொன்று பெரும் நம்பிக்கையும், ஆதரவையும் தந்து, உள்ளமார்ந்த ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளன. நிலைமை எவ்வாறு மாறினாலும், கஸாகஸ்டான், சீனாவின் நல்ல அண்டை நாடாகவும், நல்ல நண்பராகவும், நல்ல கூட்டாளியாகவும் என்றுமே இருக்கின்றது என்று நசார்பயெவ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040