சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் ஈரான் அரசுத் தலைலர் ஹாசன் ரோஹனியை 12ஆம் நாள் பிஷ்கேக் நகரில் சந்தித்துரையாடினார்.
ஈரானுடன் தொடர்பையும் பரிமாற்றத்தையும் நிலைநிறுத்தி, புரிந்துணர்வை ஆழமாக்கி, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியைக் கூட்டாக தூண்ட சீனா விரும்புவதாக ஷீ ச்சின்பிங் வலியுறுத்தினார்.
சீனாவுடன் இணைந்து அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, பண்பாடு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரதேச விவகாரங்களில் தொடர்பை நிலைநிறுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியைத் தூண்ட ஈரான் விரும்புவதாக ஹாசன் ரோஹனி தெரிவித்தார்.