• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 திபெத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றிய வெள்ளையறிக்கை
  2013-10-22 18:30:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவையின் செய்திப் பணியகம் 22ஆம் நாள் "திபெத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்" என்ற தலைப்பில் வெள்ளையறிக்கையை வெளியிட்டது. 20 ஆயிரம் எழுத்துக்கள் இடம்பெறும் இவ்வெள்ளையறிக்கையில், அதிகமான தரவுகள் மற்றும் உண்மைகள் மூலம், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சீனத் திபெத் சமூகத்தில் நிகழ்ந்த பல மாற்றங்கள் பன்முகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் வரலாற்றுப் பிரிவின் ஆய்வாளர் ச்சாங் யூவின் கருத்தில், "வளர்ச்சி" என்ற கருப்பொருள்தான், வெள்ளையறிக்கையின் மிக முக்கிய அம்சமாகும். பொருளாதார வளர்ச்சி, பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு, அரசியல் முன்னேற்றம், மக்கள் நாட்டின் உரிமையாளர்களாக இருப்பது, பண்பாட்டுப் பாதுகாப்பு, மத சுதந்திரம், சமூக மாற்றம், பல்வகை லட்சியங்களின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கை நாகரீக ஆக்கப்பணி ஆகிய துறைகளில், திபெத்தின் வளர்ச்சி தொடர்பான பல அம்சங்களை இவ்வெள்ளையறிக்கை ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் மூலம் விவரிக்கிறது.

உண்மைகள் மற்றும் தரவுகள் மூலம், திபெத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்கு ஆகும் என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் இனவியல் மற்றும் மனித இயல் ஆய்வகத்தின் ஆய்வாளர் சின் யூன் ச்சாங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"திபெத்தில், மக்கள் போதுமான மத சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். திபெத் பிரதேசம் முழுவதிலும், திபெத் மரபுவழி புத்த மதத்தின் சூழல் கோலாகலமாக இருக்கிறது என்று திபெத் பிரதேசத்துக்கு வருகை தரும் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்" என்றார் அவர்.

மத நம்பிக்கை சுதந்திரத்தைத் தவிர, திபெத்தின் தலைசிறந்த பாரம்பரியப் பண்பாடுகளை சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் பாதுகாத்து, பரவல் செய்வது பற்றி இவ்வெள்ளையறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. திபெத்தில், திபெத் மொழி கற்பித்தலை முக்கியமாக கொண்ட இரட்டை மொழி கல்வி முறைமை நடைமுறைக்கு வந்துள்ளது.

திபெத் இன மக்கள் வாழும் பல்வேறு பிரதேசங்களில், திபெத் இனப் பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு முதல், சீன நடுவண் அரசு 204 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, முக்கிய தொல் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. திபெத் இன நாடகம், கசார் காவியம் ஆகியவை, யூனேஸ்கோவின் மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் அடிப்படை பண்பாட்டு வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, திபெத் இன மக்கள் வாழும் பிரதேசத்தின் பொது பண்பாட்டுச் சேவை தரத்தை உயர்த்துவதற்கு, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரித்துள்ளன.

உலக மக்களைப் போல், நவீன நாகரீகத்தின் வளர்ச்சி சாதனைகளை அனுபவித்து, தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தங்களது வாழ்க்கை முறையை தெரிவு செய்யும் உரிமை திபெத் மக்களுக்கு உண்டு என்பதை கடந்த 60 ஆண்டுக்கால வளர்ச்சி வரலாறு நிரூபித்துள்ளது என்று சின் யூன் ச்சாங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040