• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதி
  2013-11-05 09:14:00  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்றைய நிகழ்ச்சியில், "சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதியை கேட்கயிருக்கின்றோம். அறிவிப்பாளர் தமிழந்பன்.

சீனாவில் குன் ச்சு இசை நாடகம் பூர்வாங்க ரீதியில் உருவாகிய போக்கில், நாட்டுப்புறக் கலைஞர்கள் மிகவும் முக்கியமான பங்காற்றினர். குன் ச்சு ஒப்பீட்டளவில் முழுமையான இசை நாடக வடிவமாக உருவாகிய பிறகு, மேலும் உயர் நிலைக்கு வளரத் தொடங்கியது. அப்போதைய முதல் தர எழுத்தாளர்களும், அறிஞர்களும் இவ்வளர்ச்சி போக்கில் பங்கெடுத்து, அதிகமான நாடகங்களை எழுதினர். Liang Chen Yu "Huan Sha Ji" எனும் நாடகத்தை இயற்றிய அதே வேளையில், மிங் வம்சத்தின் இசை நாடகத் துறையில் முக்கிய செல்வாக்கு கொண்ட இதர இரண்டு படைப்புகள் அதாவது "Bao Jian Ji"மற்றும் "Ming Feng Ji" இயற்றப்பட்டன. இவ்விரு படைப்புகள் குன் ச்சு அரங்கேற்றத்துக்காக இயற்றப்படாவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் இவ்விரு படைப்புகள், குன் ச்சுவில் பாடப்பட்டு, குன் ச்சு இசை நாடகக் குழுவில் மிகவும் தேர்ந்து உருவாக்கப்பட்ட சில காட்சிகள் ஆவணத் தொகுதியில் சேர்க்கப்பட்டன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040