• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதி
  2013-11-05 09:14:00  cri எழுத்தின் அளவு:  A A A   

"Huan Sha Ji"、"Bao Jian Ji"、"Ming Feng Ji" முதலிய இசை நாடகப் படைப்புகளின் கருப்பொருட்கள், அரசியலுடன் தொடர்புடையவை. இக்காலத்தில் இயற்றப்பட்ட இதர படைப்புகள், எடுத்துக்காட்டாக "Xiu Ru Ji" மற்றும் "Yu Zan Ji" யின் கருப்பொருட்கள் காதலுடன் தொடர்புடையவை. அதற்கு பின், அரசியல் மற்றும் காதல், குன் ச்சு இசை நாடகப் படைப்புகளின் இரண்டு கருப்பொருட்களாக மாறின.

மிங் வம்சத்தின் பேரரசர் Wan Li ஆட்சி புரிந்த காலத்தில், குன் ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சி வரலாற்றில் இன்னொரு தலைசிறந்த நாடக ஆசிரியராக விளங்கிய Tang Xian Zu பிறந்தார். அவர் இயற்றிய "Mu Dan Ting" என்னும் இசை நாடகப் படைப்பு, காதல் கதை ஒன்றை விவரிக்கிறது. இப்படைப்பு அரங்கேற்றப்பட்டதும், உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய பிரபுக்களின் குடும்ப அரங்கேற்ற இடங்களிலும், நாட்டுப்புற திறந்த வெளி அரங்குகளிலும், "Mu Dan Ting" என்ற கதை மக்களை மயங்கச் செய்தது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040