• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதி
  2013-11-05 09:14:00  cri எழுத்தின் அளவு:  A A A   

மிங் வம்சத்தின் இன்னொரு குன் ச்சு இசை நாடக ஆசிரியர் Shen Jing, Tang Xian Zuஐ போல் மிகவும் தலைசிறந்தவர். அவர் ச்சியாங் சூவின் Wu Jiang பகுதியை சேர்ந்தவர். அவர் அப்போதைய சமூக அமைப்பு முறையைப் பாராட்டினார். அவர் இயற்றிய குன் ச்சு இசை நாடகப் படைப்புகளில், சமூக அமைப்பு முறையில் அவரது திருப்தி மனப்பான்மை முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. அவர் குன் ச்சு இசை நாடகப் படைப்புகளை இயற்றியபோது, இசை நாடகத்தின் கலைத் தனிச்சிறப்பை வெளிப்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்தினார். அக்காலத்தின் நாடக ஆசிரியர்கள், அக்காலத்துக்குப் பிந்தைய நாடக ஆசிரியர்கள் ஆகியோருக்கு அரங்கில் அரங்கேற்றுவதற்கு ஏற்ற இசை நாடக மாதிரியை அவர் வழங்கினார். கலை பற்றிய அவரது கருத்து, அக்காலத்தின் நாடக ஆசிரியர்கள் பலரிடம் செல்வாக்கு ஏற்படுத்தியது. குன் ச்சு இசை நாடக இயற்றல் துறையில் Wu Jiang பாணி எழுத்தாளர்கள் குழுவே உருவாகியது குறிப்பிடத்தக்கது.

Tang Xian Zu தலைசிறந்த Mu Dan Tingஐ இயற்றியதும், வூ சியாங் பாணி எழுத்தாளர்கள் குழு உருவாகியதும், குன் ச்சு இசை நாடக வளர்ச்சி உச்ச காலக் கட்டத்தில் நுழைந்ததைக் கோடிட்டுக்காட்டுகிறன. Tang Xian Zu மற்றும் Shen Jingகின் செல்வாக்குடன், மிங் வம்சத்தில் குன் ச்சு இசை நாடகத்தை எழுதுதல் நாளொரு ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது. அதிகமான புகழ்பெற்ற இசை நாடகப் படைப்புகள் உருவாயின. ஏன் மிங் வம்சத்துக்கு முந்தைய யுவான் வம்சத்தில் இயற்றப்பட்ட சில இசை நாடகங்கள், குன் ச்சு வடிவத்தில் அரங்கேற்றப்பட்டன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040