• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதி
  2013-11-05 09:14:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சூ சோ பாணி எழுத்தாளர்கள், சிங் வம்சத்தின் துவக்கக் காலத்தில் குன் ச்சு இசை நாடகப் படைப்புக்கு பங்காற்றினர். சிங் வம்சத்தின் பேரரசர் Kang Xi ஆட்சி புரிந்த காலத்தில், Hong Sheng, Chang Sheng Dian என்ற படைப்பை இயற்றினார். Kong Shang Ren, Tao Hua Shan என்ற படைப்பை இயற்றினார். இவ்விரு முக்கிய குன் ச்சு படைப்புகள் இயற்றப்பட்டவை, குன் ச்சு இசை நாடக வளர்ச்சியில் புதிய சுற்று பேரெழுச்சி ஏற்பட்டதை கோடிட்டுக்காட்டுகின்றன.

சிங் வம்சத்தின் துவக்கக் காலத்தில் Li Yuவும் மிகவும் முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரது வாழ்நாளில் அவர் பத்து குன் ச்சு நாடகங்களை எழுதினார். அது மட்டுமல்ல, சீனாவின் இசை நாடகத் தத்துவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தகுநிலை பெற்றுள்ள "Xian Qing Ou Ji" என்னும் புத்தகத்தை எழுதினார். கலை ரீதியில் அவர் அதிக புதிய சிந்தனைகளை புகுத்தினர். ஆனால் அரசியல் ரீதியில் அவர் பழமைப்பற்றாளராகவே இருந்தார்.

சிங் வம்சத்தின் துவக்கக்காலம் முதல், சிங் வம்சத்தின் இடைக்காலம் வரை, குன் ச்சு அரங்கேற்றம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பல்வகை குடும்ப இசை நாடகக் குழுக்களும், தொழில் முறை இசை நாடகக் குழுககளும் அரங்கேற்றத்தில் பங்கெடுக்கும் முக்கிய சக்திகளாக அப்போதும் இருந்தன. அதேவேளையில், அரண்மனையில் குன் ச்சு அரங்கேற்றம் வளர்ந்து வந்தது. பேரரசர் Qian Long ஆட்சி புரிந்த காலத்தில், பண்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் சிலர் இசை நாடகப் படைப்புகளை இயற்றினர். குன் ச்சு அரங்கேற்றம், அரசக் குடும்பப் பண்பாட்டில் ஒன்றாக ஒன்றிணைந்தது.

நேயர்களே, "சீனாவின் குன் ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040