• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடக வளர்ச்சி பற்றிய இரண்டாவது பகுதி
  2013-11-05 09:14:00  cri எழுத்தின் அளவு:  A A A   

குன் ச்சு இசை நாடகப் படைப்புகள் அதிகமாக இயற்றப்பட்டதுடன், குன் ச்சு இசை நாடகம் பொற்கால செழுமை, நிலையை அடைந்தது. குன் ச்சு இசை நாடக அரங்கேற்றம், ச்சியாங் சூ, அன்குவெய், செ சியாங் முதலிய பிரதேசங்களில் பரவி வந்தது. மிங் வம்சத்தின் பேரரசர் Wan Li ஆட்சி புரிந்த காலத்தில், தொழில் முறை குன் ச்சு இசை நாடகக் குழுக்கள் தோன்றின. மிங் வம்சத்தின் பேரரசர்களான Tian Qi மற்றும் Chong Zhen ஆட்சி புரிந்த காலத்தில், நாட்டுப்புற குன் ச்சு இசை நாடகக் குழுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வந்தது. Nan Jing நகரில் மட்டுமே, சில பத்து குன் ச்சு இசை நாடகக் குழுக்கள் இருந்தன.

நாட்டுப்புற இசை நாடக் குழுக்களை விட, இலக்கியச் சார்ந்த பிரமுகர்களும் நற்குடி மக்களும் உருவாக்கிய குடும்ப குன் ச்சு இசை நாடகக் குழுக்கள் மேலும் அதிகமாக இருந்தன. இக்குழுக்கள் அடிக்கடி குன் ச்சு இசை நாடகத்தை அரங்கேற்றின. எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் வழிகாட்டுதல், போதிய நிதியுதவி ஆகியக் காரணங்களால், பொதுவாக கூறின் குடும்ப குன்ச்சு இசை நாடகக் குழுக்களின் அரங்கேற்ற நிலை, நாட்டுப்புற இசை நாடகக் குழுக்களின் நிலையைத் தாண்டியது.

நாட்டுப்புற குன் ச்சு இசை நாடகக் குழுக்கள் மற்றும் குடும்ப குன் ச்சு இசை நாடக குழுக்களைத் தவிர, ஓய்வு நேர கலைஞர்களின் அரங்கேற்றம், மிங் வம்சக்காலத்தில் குன் ச்சு அரங்கேற்றத்திலுள்ள முக்கிய பகுதியாகும். இந்த ஓய்வு நேர கலைஞர்களில் எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஓரளவு செல்வமடைந்த பொது மக்கள், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் முதலியோர் இடம்பெற்றனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040