சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டட சீர்திருத்தங்களை பன்முகங்களிலும் ஆழமாக்குவது தொடர்பான அம்சங்களில், இந்திய செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
சீனாவில் சந்தைப் பொருளாதாரம் நடைமுறையாவதை முதல்முறையாக முன்வைத்த பிறகு, இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தம் மற்றொரு மைல்கல் ஆகும். அதாவது, மூலவளங்களை பங்கீடு செய்வதில் சந்தையின் செய்திறனை 'அடிப்படைப் பங்கை 'முழுமையான தகுநிலைக்கு' உயர்த்த இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை வெளியிட்டுள்ளது.
சீனாவின் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில், பொருளாதாரச் சீர்திருத்தத் துறையில் சீனாவிடம் கற்றுக்கொண்டு, இந்தியா தனது தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிதுள்ளது.