சீனக் கம்யூனிஸ்ட்க் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் யூ ச்செங் ஷெங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். சீனக் கம்யூனிஸ்ட்க் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வின் எழுச்சியை நன்றாக ஆய்வு செய்து நடைமுறைப்படுத்துவது தற்போது நாட்டின் மிக முக்கிய கடமையாகும். மக்கள் அனைவரும் அரசியல் அமைப்பு அடிப்படையில் நாட்டின் விவகாரங்களைக் கலந்தாய்வு செய்து, ஜனநாயகம் பரவலாகுவதை கண்காணித்து, அரசியலிலில் பங்கெடுத்து விவாதிக்கும் மைய வரைவு இதுவாகும் என்று அவர் கூறினார்.