• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம்
  2013-12-04 09:36:48  cri எழுத்தின் அளவு:  A A A   

1990ஆம் ஆண்டுகளில், ஃபூ சியான் மாநிலத்தில் சீனாவின் முதலாவது பண்பாட்டு மரபுச் செல்வக் கல்வி முறை உருவாக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல், நான் யீன் என்னும் நாட்டுப்புற இசை, ச்சுவான் சோ நகரின் துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் இசைக் கல்வி பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ச்சுவான் சோ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நான் யீன் துறை உருவாக்கப்பட்டுள்ளது. சியா மென் நகரின் குழந்தைக் காப்பகங்களில் "மின் நான் நாட்டுப்புறக் கலைக் கல்வி பாடம்" நடத்தப்பட்டு வருகிறது. இந்நகரின் துவக்கப் பள்ளிகளில் "மின் நான் குழந்தைகள் பாடல் தளம்" நிறுவப்பட்டுள்ளது. இந்நகரின் இடை நிலைப் பள்ளிகளில் "மின் நான் பண்பாடு பற்றிய அடிப்படைகள் பாடமாக" கற்றுக்கொடுக்கப்படுகிறது. ட்சாங் சோ நகரின் துவக்கப் பள்ளிகளில், பொம்மலாட்டம் விளக்குக் கூண்டு விடுகதைகள் உள்ளிட்ட பாடங்கள் வழங்கப்பட்டு, தொடர்புடைய குழந்தைகள் கலைக் குழுக்களும் நிறுவப்பட்டன.

அது மட்டுமல்ல, ஃபூ சியான் மாநிலத்தில் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பரவல் அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. பூர்வாங்க ரீதியான புள்ளிவிபரங்களின்படி, ச்சுவான் சோ, சியா மன், ட்சாங் சோ ஆகிய மூன்று நகரங்களில், நான் யீன் நாட்டுப்புற இசை குழுக்கள் உள்ளிட்ட நாட்டுப்புற சமூகக் குழுக்களின் எண்ணிக்கை சுமார் 2000ஐ எட்டியுள்ளது. நாட்டுப்புற தொழில் முறை இசை நாடகக் குழுக்களின் எண்ணிக்கை சுமார் 250ஆகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040