தற்போது, மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கைச் சூழல் மண்டலம் சோதனை முறையில் நிறுவப்பட்டிருப்பது, இரு கரை உடன்பிறப்புகள் பண்பாட்டு மரபுச் செல்வத்தை கூட்டாக பாதுகாக்கும் பேரெழுச்சியை தூண்டியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக, பண்பாட்டு நடவடிக்கைகள் பல இரு கரைகளுக்கிடையே நடைபெற்று வருகின்றன.
இந்நடவடிக்கைகள், பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாத்து, அனைவருக்கும் தெரிவிக்கும் அதே வேளையில், தைவானுடனான பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது. மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு, சீன தேசப் பண்பாட்டின் ஒன்றிணைப்பை வலுப்படுத்தி, தாய்நாட்டின் அமைதியையும், சீனத் தேசத்தின் பொது நலன்களையும் பேணிகாப்பதில் இன்றியமையாத பங்காற்றியுள்ளது.
நேயர்களே, "மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு மண்டலம்" பற்றிக் கேட்டீர்கள். இந்நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை சீனப் பண்பாடு நிகழ்ச்சியை மொழிபெயர்க்கும் மீனாவிடம் தெரிவியுங்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.