• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம்
  2013-12-04 09:36:48  cri எழுத்தின் அளவு:  A A A   

மின் நன் பண்பாடும், தைவான் பண்பாடும் நெருக்கமாக இணைந்துள்ளன. 2005ஆம் ஆண்டு ஃபூ சியன் மாநில அரசு வெளியிட்ட 101 மாநில நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ திட்டப்பணிகளில், 40க்கு அதிகமான திட்டப்பணிகள் தைவானுடன் நெருக்கமாக தொடர்புடையவை. இது வரை பல பண்பாட்டுச் செல்வங்கள் இன்னும் தைவான் தீவில் பரந்துபட்ட அளவில் பரவி வருகின்றன.

ஃபூ சியன் மாநிலத்தின் தென் பகுதியில் பரவி வரும் லீ யுவான் இசை நாடகம், இம்மாநிலத்தின் மத்திய பகுதியில் பரவி வரும் ஃபூ சியன் இசை நாடகம், மிகவும் அரிதான கலைச் செல்வங்கள், இவ்விரு இசை நாடகங்கள் தைவானில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தலைசிறந்த பெம்மலாட்ட கலை, இனிமையான நான் யீன் இசை, பிரபலமான மின் நான் பாடல்கள் முதலியவை, பண்பாடு மீதான தைவான் நீரிணை இரு கரை மக்களின் பொது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன.

பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வத் துறையில் பரிமாற்றம், தைவான் நீரிணை இரு கரை மக்களுக்கிடையே பரந்துபட்ட அளவில் நீண்டகாலமாகவும் நேரடியாகவும் மேற்கொண்டுள்ள பண்பாட்டுப் பரிமாற்றமாகும். மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு மண்டலத்தின் கட்டுமானம், இரு கரை மக்களுக்கிடையிலான ஆழ்ந்த பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேலும் நன்றாக விரைவுபடுத்தும் என்று மா சியன் குவா தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040