• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம்
  2013-12-04 09:36:48  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த ஓராண்டுக்கு மேலாக, ஃபூ சியான் மாநிலத்தின் பண்பாட்டு வாரியம் இரண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒன்று, தற்போதைய பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு பற்றிய ஆய்வாகும். அதன் முடிவின்படி, ஃபூ சியான் மாநிலத்தில் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ பாதுகாப்பு வாரிசுகளின் எண்ணிக்கை 232 ஆகும் என்று லியாங் ச்சியாங் சென் தெரிவித்தார். ஒவ்வொரு பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணியின் தனிச்சிறப்புக்கிணங்க, பயன்மிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிர, பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பதிவுச் செய்து, பாதுகாத்து, வளர்க்கும் வகையில், சியான் மன், ச்சுவான் சோ, ட்சாங் சோ ஆகியவற்றில் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வக் கணக்கெடுப்புப் பணிகள் பன்முகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம் அமைந்துள்ள ச்சுவான் சோ, ட்சாங் சோ, சியா மன் ஆகிய மூன்று இடங்கள், தைவான் உடன்பிறப்புகளின் மூதாதையர்கள் வாழ்ந்த இடங்களாகும். இது தான் மின் நான் பண்பாடு தோன்றிய இடமாகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040