• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம்
  2013-12-04 09:36:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சமூகத்தில் நாட்டுப்புறக் கலைப் பரவல் அமைப்பு முறையை உருவாக்காமல் இருந்தால், பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நீண்டக்காலமாக நீடிக்க முடியாது என்று ஃபூ சியான் மாநிலத்தின் கலை ஆய்வகத்தின் துணைத் தலைவர் மா சியன் குவா தெரிவித்தார்.

தற்காலத்தில் மின் நான் பண்பாட்டில் பலதரப்பட்ட தன்மை, முழுமைத் தன்மை மற்றும் தனிச்சிறப்புத் தன்மை இன்னமும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டுப்புறப் பழக்க வழக்க ரீதியில் சீனாவின் மத்தியப் பகுதியின் தனிச்சிறப்பும், ஃபூ சியானின் பழமை வாய்ந்த தனிச்சிறப்பும் இணைந்து காணப்படுகின்றன. கலை ரீதியில் டாங் மற்றும் சுங் வம்சங்களின் இசை வடிவமான நான் யீன் இசை, சுங் மற்றும் யுவான் வம்சக்காலங்களின் இசை நாடகத்தின் வாழும் தொல்லுயிர் என்று அழைக்கப்படும் லீ யுவான் இசை நாடகம் ஆகியவை பரவி வருகிறன. மத நம்பிக்கை ரீதியில், உலகின் சில முக்கிய மதங்களும், உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த மத நம்பிக்கைகளும் இணக்கமாக இருக்கின்றன. தவிர, இங்குள்ள கப்பல் கட்டுதல், பீங்கான் பொருட்கள் உற்பத்தி, தேயிலை உற்பத்தி, புகழ் பெற்ற கைவினை கலை, மின் நான் நாட்டுப்புற குடியிருப்புகள், கோயில்கள் பரந்துபட்ட அளவில் காணப்பட்டுள்ளன.

மின் நான் பண்பாட்டு உயிரின வாழ்க்கைக் சூழல் மண்டலத்தின் மொத்த நிலப்பரப்பு, 25 ஆயிரத்து 180 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை, ஒரு கோடியே 40 இலட்சமாகும். இது சீனாவின் முதலாவது பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் மண்டலமாகும். இது உலகில் மிக அதிகமான மக்கள் தொகையும், மிக பெரிய நிலப்பரப்பும் கொண்டுள்ள பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் மண்டலமுமாகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040