• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேநீர் சுவையுணர் கலைஞர் ஃஃபங் ஹோங் ஷெங்
  2013-12-10 09:59:09  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங் ஷான் மலை, சீனாவின் அன்குவெய் மாநிலத்தின் புகழ்பெற்ற இயற்கைக் காட்சி தலமாகும். குவாங் ஷான் மலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களில் மிகவும் பழமை வாய்ந்த தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை செடிகளைப் பயிரிடும் திறமைசாலிகளும், தேயிலை தயாரிப்புத் திறமைசாலிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கே தோன்றியுள்ளனர். இங்கே பயிரிடப்படும் குவாங் ஷான் மெளவ் ஃபெங் எனும் தேயிலை, சீன வரலாற்றில் புகழ்பெற்ற தேயிலை வகைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் துவக்கம் முதல் மே திங்கள் துவக்கம் வரையான காலம், இங்குள்ள மக்கள் குவாங் ஷான் Mao Feng தேயிலைப் பறிக்கும் காலம் ஆகும். உயர் நிலை தேநீர் சுவையுணர் கலைஞர் ஃஃபங் ஹோங் ஷெங் அண்மையில் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.

திரு ஃபங் ஹோங் ஷெங், குவாங் ஷான் நகரின் குவெய் சோ ஹோங் துங் குவாங் ஷான் Mao Feng தேயிலை ஆய்வகத்தின் தலைமை இயக்குநராகவும், குவாங் ஷான் நகரின் சின் அன் தொல்பொருள் சேகரிப்பு சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கின்றார். சீனாவின் பாரம்பரிய மருத்துவர் குடும்பத்தில் ஃபங் ஹோங் ஷெங் பிறந்தார். மேனிலைப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின், அவர் மூன்று ஆண்டுகளாக அவரது தந்தையிடமிருந்து சீனப் பாரம்பரிய மருத்துவவியலைக் கற்றுக்கொண்டார். அதற்கு பின் அவர் மூன்று ஆண்டுகளாக படையில் சேவை புரிந்தார். படையிலிருந்து விலகிய பிறகு அவர் வேலை செய்யத் துவங்கினார். இதற்கிடையே அவர் குவெய் சோவின் பாரம்பரியப் பண்பாடுகள் மீது நாளுக்கு நாள் மேலதிகமாக தெரிந்துக் கொண்டார். அப்போது தொல்பொருட்கள் சேகரிப்பு ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொல்பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட வேண்டுமென அவர் விருப்பினார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040