• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேநீர் சுவையுணர் கலைஞர் ஃஃபங் ஹோங் ஷெங்
  2013-12-10 09:59:09  cri எழுத்தின் அளவு:  A A A   

1990ஆம் ஆண்டு ஃபங் ஹோங் ஷெங் Tun Xi சாலையில் ஒரு கடையைத் திறந்து வைத்தார். துவக்கத்தில் இக்கடையின் அலுவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அவரது இலட்சியம் உச்ச நிலையை அடைந்த போது, அவர் அதே சாலையில் நான்கு கடைகளைத் திறந்து வைத்தார். அவர் அதிக மதிப்புள்ள தொல்பொருட்களைக் சேகரித்துள்ளார். பண்டைக்கால மற்றும் தற்கால பிரமுகர்களின் நேர்த்தியான கையெழுத்து படைப்புகள் மற்றும் ஓவியங்கள், பீங்கான் பொருட்கள், பல்வகை குவெய் சோ சிற்பப் படைப்புகள் அவற்றில் இடம்பெறுகின்றன. ஃபங் ஹோங் ஷெங் குவாங் ஷான் நகரின் சின் அன் தொல்பொருள் சேகரிப்புச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தொல் பொருள் கடைகளில், தரமிக்க தேயிலை உள்ளிட்ட குவாங் ஷான் பிரதேசத்தின் சிறப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. குவாங் ஷான் Mao Fengஐ முக்கியமாக கொண்ட தேயிலை வகை நன்றாக விற்பனையாகின்றது. ஃபங் ஹோங் ஷெங் கூறியதாவது:

"கடந்த சில ஆண்டுகளாக பண்பாட்டுப் பொருட்களின் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தேன். தொல்பொருட்களின் பண்பாடு, குவெய் சோ பண்பாடு ஆகியவற்றுடன் தேயிலையும் ஒன்றிணைந்துள்ளதாக கருதுகிறேன்" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040