• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   

லான் குவன் இசை நாடகம், சீனாவின் யுவான் வம்சத்தில் பரந்துபட்ட அளவில் பரவிய கே யாங் (Ge Yang)பாணியின் பிற்கால வடிவமாகும். இந்த இசை நாடகம், தொடர்புடைய பழம்பெரும் நூல்களின் அடிப்படையில், தலைமுறை தலைமுறையாக கலைஞர்களின் வாய்வழி மூலம் இன்று வரை பரவியுள்ளது.

69 வயதான ஜி சியாங் லின்(Ji Xiang Lin), லான் குவன் இசை நாடகத்தின் வாரிசு ஆவார். அவரது அறிமுகத்தின்படி, ஷென் துங் மாநிலத்தின் யான் தெய் பிரதேசத்தைச் சேர்ந்த லாய் செள நகரின் ஜின் செங் வட்டத்தின் துங் ஜி கிராமம், லான் குவன் இசை நாடகம் தோன்றிய இடமாகும். ஜி சியாங் லின் கூறியதாவது:

"முன்பு எனது கிராமத்தில் வாழ்ந்த முதியோரின் அறிமுகத்தின்படி, மிங் வம்சத்தின் இறுதிக்காலம் மற்றும் சிங் வம்சத்தின் துவக்கக்காலத்தில் தோன்றிய இசை நாடகம் இதுவாகும். கலைஞர்கள் வாய்வழி கலையாக இதுவரை பரவி வருவதுடன், இந்த இசை நாடகம் துங் ஜி கிராமத்தில் மிகவும் செழிப்பாகி வந்தது. லான் குவன் இசை நாடகத்தில் அரங்கேற்றுபவர்களில், சிலர் அந்நாடகத்தில் பாடுவதற்கு சிறப்பாக பொறுப்பேற்கின்றனர். சிலர் பின்னணியில் பாடுவதற்குப் பொறுப்பேற்கின்றனர். சிலர் இசைக் கருவியோடு இணைந்து பாடுவதற்குப் பொறுப்பேற்கின்றனர். குழந்தைப் பருவத்திலேயே லான் குவன் இசை நாடகத்தில் ஆர்வம் கொண்டேன். அதுவே இனிமையானது என்று கருதினேன். எனது கிராமவாசிகளைப் பின்பற்றி லான் குவன் இசை நாடகத்தைப் பாடினேன்" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040