• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   

64வது வயதான ஜி போ மின் அம்மையார் சிறு வயதிலிருந்தே லான் குவன் இசை நாடகத்தை நேசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் லான் குவன் இசை நாடக ஆர்வலர்கள் ஆவர். அவரது 100 வயதான மாமியார், மகிழ்ச்சியை லான் குவன் இசை நாடக வரிகளைப் பாடி வெளிப்படுத்துகின்றார்.

காலத்தின் மாற்றத்திற்கிணங்க, பல நாட்டுப்புற இசை நாடகங்கள் மறைந்து விட்டன. ஆனால் லாய் செளவின் கிராமங்களில், கோலாகலமான பாரம்பரியப் பாணியுடைய லான் குவன் இசை நாடகம், இன்னமும் பரவியுள்ளது. லான் குவன் இசை நாடகம், சீனாவின் பண்டைக்கால இசை நாடகங்களை ஆய்வு செய்வதற்கு மிக அரிய "உயிர் புதை படிவமாக" விளங்குகிறது என்ற கருத்து உள்ளது.

ஜி சியாங் லின்னுக்கு வயது 69. அவருக்கு 16 வயதாக இருந்தபோது, லான் குவன் இசை நாடகத்தைப் பாடத் தொடங்கினார். இது வரை சில பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. லான் குவன் இசை நாடகம், பொது மக்களின் வாழ்க்கையிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகிறது. இதற்காக ஜி சியாங் லின் மிகவும் கவலைப்படுகிறார். அவர் கூறியதாவது:

"லான் குவன் இசை நாடக வாரிசாக, இந்த இசை நாடகம் தொடர்ந்து கையேற்றப்பட வேண்டும் என்றும், மேலதிக மக்கள் இந்த இசை நாடகத்தை கேட்டு இரசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தற்போது, இதை அறிந்து கொண்டுள்ள மக்கள் குறைவு. இதைப் பாடத் தெரியும் மக்கள் மேலும் குறைவாகவே இருக்கின்றனர். வேறு இசை நாடகங்களைப் போல்லாமல், லான் குவன் இசை நாடக அரங்கேற்றத்தில் பங்கெடுக்க அதிகமான மக்கள் தேவைப்படுகின்றனர். பாடகர்கள் பாடுவதைத் தவிர, சில பத்து பேர் பின்னணியில் பாட வேண்டும். சிலர் இசைக் கருவியை இசைத்து இசையோடு உடன்பாடுவதில் ஈடுபட வேண்டும். அதனால், லான் குவன் இசை நாடகத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு தடையாக அமைகிறது" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040