• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   

லான் குவன் இசை நாடகத்தின் வளர்ச்சிப்போக்கில், இதற்கு செழிப்பான அம்சங்கள் கிடைத்துள்ளன. புள்ளிவிபரங்களின்படி, இந்த இசை நாடகங்களின் மொத்த எண்ணிக்கை, சுமார் நூறு ஆகும்.

ஜி சியாங் லீன்னின் அறிமுகத்தின்படி, இந்த இசை நாடகத்தின் உள்ளூர் பேச்சு வழக்கு தனிச்சிறப்பு காரணமாக, இது பெருமளவில் பரவுவதில் இன்னல்கள் நிலவுகின்றன. அதனால் இது பற்றி அறிந்து கொண்டு, கற்றுக்கொள்ளும் மக்கள் குறைந்து வருகின்றனர். லான் குவன் இசை நாடகத்தின் பரவலைத் தூண்டும் பொருட்டு, மக்கள் இந்த நாடகத்தின் பாட்டு வரிகளை மீண்டும் தொகுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"முந்தைய இசை நாடக வரிகள், சில செவிவழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் இயற்றப்பட்டன. இவ்வரிகளைப் புரிந்துக் கொள்வதில் இன்னல்கள் நிலவுகின்றன. பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய வரிகளை மீண்டும் தொகுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் விளைவாக, லான் குவன் இசை நாடகம், மேலதிக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராட்டுக்குள்ளாகும்" என்றார் அவர்.

நேயர்களே, "லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040