• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   

பாடுகின்ற பாணி, லான் குவன் இசை நாடக இசையிலுள்ள மிக முக்கிய பகுதியாகும்.

பின்னணியில் பாடுகின்ற பாணி, லான் குவன் இசை நாடகக் கலை வடிவத்தில் முக்கியமாக இருக்கிறது. லான் குவன் இசை நாடகத்தில், ஒருவர் அரங்கில் தனியாக பாடுகிறார். மேடையிலுள்ள பிறர் பின்னணியாக பாடுகின்றனர். தட்டி தாளமிடும் இசை கருவிகள் மட்டுமே பாடுவதில் பயன்படுத்தப்படுகின்றன. பின்னணியில் பாடுவதில் பாடுவோரின் இயல்பான குரல் ஒலியும், உச்ச சுவர ஒலியும் (falsetto) ஒன்றிணைந்து பாடப்படுகின்றன. அவ்வான இசை ஒலிகள் இனிமையாகவும், ஒழுங்காகவும் கேட்கின்றன.

லான் குவன் இசை நாடகத்தின் பாட்டின் தனிச்சிறப்பு காரணமாக, அந்த இசை நாடகத்தை நன்றாகப் பாடினால், ஒருவர் தலைசிறந்த குரல்வளம் கொண்டிருப்பார். அதன் அடிப்படையில், அவர் அடிக்கடி பயிற்சி செய்து, மற்றவருக்கு நெருக்கமாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜி சியாங் லின் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"மகிழ்ச்சி அளிப்பது, லான் குவன் இசை நாடகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். பொது மக்கள் கேட்பதற்கு இது ஏற்றது. பீக்கிங் இசை நாடகம், Lv இசை நாடகம் போன்ற நாடகங்களை ஒருவர் அல்லது சில பேர் பாடும்போது, வேறு சிலர் பின்னணியில் இசைக் கருவிகளை இசைத்து உடன்பாடுகின்றனர். இது ஓரளவு உற்சாகமற்றதாக இருக்கிறது. லான் குவன் இசை நாடகத்தை அரங்கேற்றுவதில் அனைவரும் நன்றாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரங்கேற்றுபவர்கள் அனைவரும் இசையோடு கூட்டாக பாடி, மகிழ்ச்சியடைகின்றனர்" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040