• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி
  2014-01-21 16:05:25  cri எழுத்தின் அளவு:  A A A   
2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையில் அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு சீனத் திரைப்படத்துறையில் சீட்டுகள் மூலம் கிடைத்த மொத்த வருமானம், 2150 கோடி யுவானை தாண்டியது. சீனாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களில், சீனாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், சீனப் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. உள்நாட்டு திரைப்படங்களின் சீட்டுகள் மூலம் கிடைத்த மொத்த தொகை, சீனத் திரைப்பட துறையின் மொத்த வருமானத்தில் 60 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்த புகழ் பெற்ற இயக்குநர் ஃபெங் சியாவ் காங் இயக்கிய personal tailor என்னும் திரைப்படத்தின் வருமானம், பத்து நாட்களுக்குள் 50 கோடி யுவானைத் தாண்டியது. திரைப்பட விமர்சகரும், சிங்குவா பல்கலைக்கழகத்தின் செய்தி மற்றும் தகவல் தொடர்புக் கல்லூரியின் ஆசிரியருமான லியாங் ச்சுன் சியன் செய்தியாளரிடம் பேசுகையில், 2012ஆம் ஆண்டு சீனாவில் திரையிடப்படும் அமெரிக்க திரைப்படங்களை அதிகரிப்பது தொடர்பாக சீனா அமெரிக்காவுடன் உடன்படிக்கையை உருவாக்கிய பின், சீன மொழி திரைப்படங்களின் வருமானம், சீனாவில் திரையிடப்பட்ட அமெரிக்க திரைப்படங்களின் வருமானத்தை விட குறைவு. ஆனால் 2013ஆம் ஆண்டு சீன மொழி திரைப்படங்களின் வருமானம், திரைப்படங்களின் மொத்த வருமானத்தில் 50 விழுக்காட்டுக்கு மேலாக உள்ளது. சீன மொழி திரைப்படங்களின் தர உயர்வே இதற்கு முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040