• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி
  2014-01-21 16:05:25  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் நாள், கம்போடியத் தலைநகர் பெனாம் பென்னில் நடைபெற்ற 37வது உலக மரபுச் செல்வ மாநாட்டில், சீனாவின் தியன் ஷான் மலை, யுன்னான் மாநிலத்தில் உள்ள ஹானி இன படித்தட்டு வயல்கள் ஆகியவை, யுனேஸ்கோவின் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதேவேளையில், சீனாவில் இப்பட்டியலில் சேர்வதற்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. குவெய் சோ மாநிலத்தின் துங் ரென் நகரின் ஃபென் சிங் மலை, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு தொடர்புடைய வாரியம் பாடுபட்டு வருகிறது. ஹுபெய் மாநிலத்தின் வூ ஹான் நகரிலுள்ள யாஞ்சி ஆற்றைக் கடக்க உதவும் பாலம், இப்பட்டியலில் சேர விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தொடர்படைய நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040