• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி
  2014-01-21 16:05:25  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டு ஜூன் திங்கள் பெய்சிங்கிலுள்ள அரண்மனை அருங்காட்சியகத்தின் தலைமைக் காப்பாளர் ஷான் ஜி சியாங் சொற்பொழிவு நிகழ்த்தினார். "மகத்தான அரண்மனை அருங்காட்சியகத்தை, அடுத்த 600 ஆண்டுகளில் முழுமையாக காலடியெடுத்து வைக்கச் செய்வது என்பது, அவரது சொற்பொழிவின் தலைப்பாகும். மிங் வம்சத்தின் பேரரசர் ச்சூ தி ஆட்சி புரிந்த 1420ஆம் ஆண்டில் இவ்வரண்மனை கட்டியமைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டதன் 600ஆம் ஆண்டு நிறைவாகும். ஷான் ஜி சியாங்கின் கருத்தில், அரண்மனை அருங்காட்சியகத்தின் முழுமை மூன்று துறைகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. முதலில், இவ்வரண்மனையின் கட்டிடங்களை முழுமையாக நிலைநிறுத்த வேண்டும். அதாவது, இவ்வரண்மனையிலுள்ள சுமார் 9000 பழங்கால வீடுகள் சீராக பராமரிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள சுமார் 18 லட்சம் தொல் பொருட்கள் பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அரண்மனை அருங்காட்சியகத்தின் பண்பாட்டுச் சூழல் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்த அரண்மனையில் தொல் பொருட்கள் மற்றும் கட்டிடங்களின் பராமரிப்பு பணி முடிவுக்கு வந்த பிறகு, இந்த அரண்மனையின் மேற்குப் பகுதி பயணிகளுக்கு திறந்து வைக்கப்படும். தற்போது, பயணிகளுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள பகுதி, அரண்மனையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 52 விழுக்காடு வகிக்கிறது. 2015ஆம் ஆண்டு இவ்வரண்மனையின் மேற்கு பகுதி திறந்து வைக்கப்படும். இப்பகுதி, மகளிர் உலகம் என அழைக்கப்பட்டுள்ளது. அரச குடும்ப மகளிர் தங்கியிருந்த பகுதி இதுவாகும் என்று ஷான் ஜி சியாங் அறிமுகப்படுத்தினார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040