• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி
  2014-01-21 16:05:25  cri எழுத்தின் அளவு:  A A A   

நெதர்லாந்து நாட்டவர் ஹோஃப்மன் வடிவமைத்த "பெரிய மஞ்சள் வாத்து" என்ற பொம்மை, 2013ஆம் ஆண்டு மே திங்கள் ஹாங்காங்கின் விக்டோரியா துறைமுகத்திற்கு வந்தது. அதற்கு பிறகு இந்த பெரிய மஞ்சள் வாத்து சீன மக்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்காங் மற்றும் தைவானுக்கு சென்றதைத் தவிர, இந்த பெரிய மஞ்சள் வாத்து பெய்சிங்கில் உள்ள பன்னாட்டு தோட்ட கண்காட்சியிலும், கோடைக்கால மாளிகையிலும் காட்சி அளித்தது. வேறுபட்ட அளவுகளில் பெரிதாகவோ, சற்று சிறிதாகவோ இந்த பெரிய மஞ்சள் வாத்து, உலகிலுள்ள 20க்கு மேலான நகரங்களுக்கு சென்றுள்ளது. பொது மக்களிடம் குழந்தைகளின் பண்புகளை எழுச்சியுற செய்ய வேண்டும் என்று இந்த வடிவமைப்பாளர் விருப்பம் தெரிவித்தார். புகழ் பெற்ற திரைப்படக் கலைஞ்ர் ஜாக்கிச் சான் பேசுகையில், இந்த பெரிய மஞ்சள் வாத்து, இணக்கம் மற்றும் அமைதியை அடையாளப்படுத்தும் சின்னமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

பொம்மைப் பொருளாக இந்த பெரிய மஞ்சள் வாத்து, கலை படைப்பாற்றல் மூலம், மிக பல மக்களால் பாராட்டப்படும் கலைப்பொருளாக மாறியுள்ளது. அதிகமான பண்பாட்டு வளங்களைக் கொண்டுள்ள சீனாவைப் பொறுத்த வரை, பெரிய மஞ்சள் வாத்து மனங்களை கவர்வதில் வெற்றருப்பதை அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

நேயர்களே, "2013ஆம் ஆண்டு சீனப் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040