• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பல்கலைக்கழகப் பட்டத்தாரிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினை
  2014-02-04 18:37:30  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டு, சீனாவின் பல்கலைக்கழகங்களிலிருந்து மொத்தம் சுமார் 72 இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள். வேலை வாய்ப்பு பெறுதலில் அந்த இளைஞர்களின் முயற்சிகளைப் பார்ப்போம்.

அலுங் என்னும் மாணவர், குவெய்யாங் நகரத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு மே திங்கள், அவர் தென்கொரியாவின் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துக்கொண்டு, சீன அரசியில் மற்றும் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு, அவர் நல்ல வேலையைத் தேட பாடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது:

எனது வேலை இன்னும் உறுதியாகவில்லை. நான் மட்டுமல்ல, என் உடன்மாணவர்கள் சிலரும் தொடர்ந்து வேலை தேடுகின்றனர். பெய்ஜிங்கில் நல்ல வேலை கிடைப்பது மிக கடினம் என்று குறிப்பிட்டார்.

ஷாங்காய் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சூ ச்சிலியாங் இது பற்றி கூறுகையில், உயர் கல்வி நிலையங்களின் மாணவர் சேர்க்கை விரிவாக்கக் கொள்கையினால், சீனாவில் பட்டத்தாரிகள் மேன்மேலும் அதிகமாகி வருகின்றனர். ஆனால், சீனப்பொருளாதார அதிகரிப்பு வேகம் மந்தமாகி வருவதுடன், சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா பிரச்சினை, நாளுக்குநாள் கடினமாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

சீனாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இளைஞர்களுக்கு வேலையில்லா பிரச்சினை நிலவுகிறது. ஜெனிவாவில் நடைபெற்ற 2014ஆம் ஆண்டு உலக வேலை வாய்ப்பு போக்கு பற்றிய அறிக்கை வெளியிட்ட கூட்டத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை செயலாளர் ஜுய் ரைடெர் பேசுகையில், அடுத்த சில ஆண்டுகளில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறினார். குறிப்பாக, இளைஞர்கள் வேலையிழப்பு பிரச்சினையில் மேலதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு உலகில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலைமையைப் பார்த்தால், 2018ஆம் ஆண்டில், வேலை இழப்பாளரின் எண்ணிக்கை 21 கோடியே 50 இலட்சத்தைத் தாண்டும் என்று ஜூய் ரைடெர் மதிப்பிட்டார்.

சீனாவில் அவ்வளவு அதிகமான பட்டத்தாரிகள் இருந்த போதிலும், சீன அரசு வேலையில்லாப் பிரச்சினையை சீராக கையாண்டு வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவின் நகரங்களில் புதிய வேலை வாய்ப்புகள் நிதானமாக அதிகரித்தது. முழு ஆண்டிலும், வேலையிழப்பு விகிதம், சுமார் 4 விழுக்காடு மட்டுமே.

வசந்த விழா சீன மக்களைப் பொறுத்தவரை மிக முக்கிய திருவிழா ஆகும். குடும்பத்தினருடன் ஒன்றுகூடி, விழாவை மகிழ்வுடன் கழிக்கும் போது, தங்களுக்கு உகந்த வேலையைத் தேடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் சூ, பட்டத்தாரிகளுக்கு முன்மொழிவு முன்வைத்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040