அன் ஷுன் நகரின் மா குவன் வட்டம், குய் சோ சி லு என்ற ஹுவா தெங் கலையின் தோற்றுவாய் இடமாகும். ஹுவா தெங் கலை அவ்வட்டத்திலுள்ள மிக பல மக்களிடையே பரவி வருகிறது. 1994ஆம் ஆண்டு மா குவன் வட்டம், "குய் சோ மாநிலத்தின் ஹுவா தெங் கலை ஊர்" என சிறப்பு பெயர் பெற்றது. மா குவன் வட்டத்தில், ஹுவா தெங் கலை, உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்குத் துணை புரிகிறது.
2005ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், மா பாவ் விவசாயிகள் கலைக்குழு நிறுவப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் உள்ளூர் விவசாயிகளாவர். அவர்கள் உழுகின்ற கலப்பையை கைவிட்டு விட்டு, விவசாயத்திலிருந்து விலகினர். அவர்கள் வண்ண விசிறிகளை அசைத்து, ஹுவா தெங் நடனம் ஆடுவதை அவர்களது தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கினர். 2010ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், மா குவன் பண்பாடு மற்றும் கலை வளர்ச்சிக் கூட்டு நிறுவனம் நிறுவப்பட்டது. விவசாயிகள் அவர்களே நிதித் திரட்டி உருவாக்கிய குய் சோ மாநிலத்தின் முதலாவது பங்கு முதலீட்டு முறை அரசு சாரா பண்பாட்டுத் தொழில் கூட்டு நிறுவனம் இதுவாகும். அப்போது முதல், ஹுவா தெங் சந்தை விரிவாகி வருகிறது. இக்கூட்டு நிறுவனத்தின் வழிகாட்டலுடன், ஹுவா தெங் கலை, வயல்களிலிருந்து, உள்ளூர் பள்ளிகளுக்குப் பரவலாகி, கிராமத்திலிருந்து நகரங்களில் நுழைந்துள்ளது.