• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சோ மாநிலத்தின் ஹுவா தெங் கலை
  2014-02-18 09:12:09  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹுவா தெங் கலையைச் சார்ந்து, மா குவன் பண்பாடு மற்றும் கலை வளர்ச்சிக் கூட்டு நிறுவனம், உள்ளூர் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் நன்றாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. இக்கலை, பண்பாட்டுத் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

ஹுவா தெங் கலை அரங்கேற்றம், கைவினை விளக்கு, நாட்டுப்புறத் திருமண விழா சேவை உள்ளிட்ட பண்பாட்டுத் தொழில் தொடர் இக்கூட்டு நிறுவனத்தில் உருவாகியுள்ளது. தற்போது இக்கூட்டு நிறுவனம் சீராக வளர்ந்து வரும் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இக்கூட்டு நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு சுமார் 10 இலட்சம் யுவானாகும்.

பொருளாதாரப் பயனில் கவனம் செலுத்தும் அதேவேளையில், ஹுவா தெங் கலைத் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் முக்கியத்துவத்தை இக்கூட்டு நிறுவனம் புரிந்துக் கொண்டுள்ளது. ஹுவா தெங் கலையைக் கையேற்றி, வளர்க்கும் வகையில், புதிய திறமைசாலிகளை பயிற்றுவிக்க, மா பாவ் விவசாயிகள் கலைக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஹுவா தெங் கலைப் பயிற்சி மையத்தை இக்கூட்டு நிறுவனம் நிறுவியது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040